
அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாநிலத்தில் கறுப்பின இளையரைத் தவறுதலாகத் துப்பாக்கியால் சுட்டதை ஒப்புக்கொண்ட 86 வயது முதியவர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குமுன் மாண்டார்.
ஆண்டிரு லேஸ்டர் (Andrew Lester) என்ற அந்த முதியவர் கடந்த வெள்ளிக்கிழமை (14 பிப்ரவரி) குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
வழக்கின் தீர்ப்பு மார்ச் 7ஆம் தேதி வழங்கப்படவிருந்த நிலையில் அவர் மாண்டதாக நேற்று (19 பிப்ரவரி) அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது.
அப்போது 16 வயது இளையர் ரால்ஃப் பால் யார்ல் (Ralph Paul Yarl) கான்சஸ் சிட்டி (Kansas City) நகரில் நண்பரின் வீட்டிலிருந்து தமது இரு சகோதரர்களை அழைக்கச் சென்றார்.
அப்போது அவர் தவறான வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டார்.
அது ஒன்றுதான் அந்த இளையர் செய்த தவறு.
முதியவர் அந்த இளையரைத் தவறாக நினைத்துவிட்டார்.
தம் வீட்டிற்குள் யாரோ அத்துமீறி நுழைய முயல்வதாகத் தவறாக எண்ணிய முதியவர், அந்த இளையரைத் தலையிலும் கையிலும் சுட்டார்.
AFP செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.
சம்பவத்திற்குப் பிறகு மழுமையாகக் குணமடைந்துவிட்ட யார்ல் தற்போது டெக்சஸ் (Texas) மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவில் அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கிச் சூடு நடந்துவிடுகிறது.
மொத்தம் 330 மில்லியன் மக்களைக் கொண்ட அமெரிக்காவில் சுமார் 400 மில்லியன் துப்பாக்கிகள் உள்ளன என்று நம்பப்படுகிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments