
11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச் 370 விமானத்தைத் தேடும் புதிய முயற்சி குறித்து ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனத்துடன் அரசாங்கம் இன்னும் ஒப்பந்தத்தை முடிவு செய்யவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் குறிப்பிட்டார்.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஆய்வு நிறுவனம் நேற்று இந்தியப் பெருங்கடலில் தேடலைத் தொடங்கியுள்ளதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை அரசாங்கம் வரவேற்பதாக அவர் கூறினார்.
அரசாங்கம் இன்னும் ஒப்பந்தத்தை முடிக்கவில்லை.சட்டத் துறை அலுவலகத்திடமிருந்து தற்போது அனுமதி கிடைத்துள்ளது.
நிபந்தனைகளில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
கடந்த டிசம்பரில், புதிய தேடல் பணிக்கான ஓஷன் இன்ஃபினிட்டியின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் கொள்கையளவில் ஒப்புக்கொண்டது.'
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments