Ticker

6/recent/ticker-posts

Ad Code



அமெரிக்காவில் 7 ஆயிரம் இந்திய மாணவர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்… பகீர் கிளப்பும் தகவல்!


அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த 7 ஆயிரம் மாணவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருக்கிறார்கள் என்ற பகீர் கிளப்பும் தகவல் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. கமலா ஹாரீஸுக்கும் ட்ரம்புக்கும் இடையே பெரிய போட்டி இருந்தது. இதில் டொனால்ட் டரம்ப் வெற்றிபெற்றார். இதனையடுத்து அவர் அதிபராக பொறுப்பேற்றார். பதவியேற்றவுடனே பல அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

இதில் ஒன்று, பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனால், அங்கு வாழும் 10 லட்ச இந்தியர்கள் பேரதிர்ச்சி ஆனார்கள்.

அதாவது பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அந்நாட்டு மண்ணில் பிறந்த குழந்தைக்குத் தாமாக குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான சட்டம் கடந்த 1868ம் ஆண்டிலிருந்து அமலில் இருந்து வருகிறது. 

அதேபோல், மக்கள் சட்டவிரோதமாக குடியேறி வந்தார்கள். இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அதன்படி சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக 538 பேர் நாடு கடத்தப்பட்டனர். மேலும் தற்போது இந்தியர்கள் குறித்தான விவரம் வெளியாகியிருக்கிறது.

அதாவது 7,000க்​கும் மேற்​பட்ட இந்திய மாணவர்கள் சட்ட​விரோதமாக தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதுகுறித்து அமெரிக்க குடியேற்ற கல்வி மையத்தில் வசித்து வரும்  ஜெசிகா எம்.வேகன் அமெரிக்க பல்கலைக்​கழகங்​கள், கல்வி நிறு​வனங்​களில் வெளி​நாட்டு மாணவர்கள் கல்வி பயில எப் 1 விசா வழங்​கப்​பட்டு வரு​கிறது.

மேலும் கல்வி சுற்றுலா வரும் வெளி​நாட்டு மாணவ, மாணவியருக்கு எம் 1 விசா வழங்​கப்​படுவது வழக்கமாக இருந்து வரு​கிறது. இந்தியா, சீனா, பிரேசில், கொலம்​பியா நாடு​களில் இருந்து எப்1, எம்1 விசா பெற்று அமெரிக்கா வரும் மாணவர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து சட்ட​விரோதமாக தங்கியுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக இந்தியாவை சேர்ந்த சுமார் 7000-க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவியர் அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக தங்கி​யிருப்பதாகவும்  எச்1பி விசா பெற்றும் அமெரிக்​கா​வில் பணியாற்றும் வெளி​நாட்​டினரும் விசா காலம் முடிந்த பிறகும் இங்கேயே தங்கி  இருப்பதாகவும். அவர்கள் மேல் உடனே நடவடிக்கை எடுக்குமாறு  ஜெசிகா எம்.வேகன் தெரிவித்துள்ளார்.

kalkionline


 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments