மாலத்தீவுக்கு ரூ.600 கோடி, நேபாளத்துக்கு ரூ. 700 கோடி நிதி உதவியை இந்தியா வரும் நிதியாண்டில் வழங்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில், கடந்த ஆண்டு மாலத்தீவுகளுக்கு நிதிஉதவியாக ரூ.470 கோடியை இந்தியா வழங்கியது. இது வரும் நிதியாண்டில் ரூ.600 கோடியாக அதிகரிக்கப்படும்.
வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் மொத்த நிதியுதவி ரூ.4,883 கோடியிலிருந்து ரூ.5,483 கோடியாக அதிகரிக்கப்படும். நேபாளத்துக்கு ரூ.700 கோடி வழங்கப்படும்.
இந்த நிதி மூலம் அந்த நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
nambikkai
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments