Ticker

6/recent/ticker-posts

Ad Code



4-பிக்ஹுஸ் ஸவ்ம்-- நோன்பின் சட்டங்கள்

(இந்த ஆக்கம் அஷ்ஷெய்க் கலாநிதி ஹைஸம் ஸர்ஹான் என்பவரின் "பிக்ஹுஸ் ஸவ்ம்" என்ற கையேட்டின் மொழி பெயர்ப்பாகும்)


நோன்பு காலத்தில் ஆர்வமூட்டப்பட்ட ஸுன்னத்கள்:

1- ஸஹர் செய்தல். 

2- ஸஹர் உணவை இறுதி நேரம் வரைப் பிற்படுத்தல்.

3- நோன்பு துறப்பதை அவசரப்படுத்தல்.

4- பேரீச்சம் பழங்களைக் கொண்டு நோன்பு துறத்தல். அவை ஒற்றைப்படையாக இருத்தல். அவை கிடைக்காவிட்டால் தண்ணீர் மிடர்களைக் கொண்டு நோன்பை முடித்தல். எதுவும் கிடைக்காவிட்டால் உள்ளத்தினால் நோன்பு துறப்பதாக எண்ணம் கொள்ளுல்.

5- நோன்பு  நோற்றதிலிருந்து நோன்பு துறக்கும் வரையுள்ள நேரத்தில் துஆ கேட்டல்.

6- அதிகமாக தர்மம் செய்தல்.

7- இரவுத் தொழுகையில் கூடுதல் ஈடுபாடு காட்டுதல். 

8- குர்ஆனை ஓதுதல்.

9- உம்றஹ் செய்தல்.

10- எம்மைத் திட்டியவருடன் சண்டை போடாமல் "நான் நோன்பாளி" என்று கூறி விலகிச் செல்லல்.

11- லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வதற்கு முயற்சி செய்தல்.

12- கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருத்தல்.

நோன்பு  நோற்றிருக்கும் போது வெறுக்கப்பட்டவை / விரும்பப்படாதவை:

1- உளுவின் போது மிகையாக / ஆழமாக வாய் கொப்பளிப்பதும் நாசிக்குத் தண்ணீர் செலுத்துவதும்.

2- தேவையில்லாமல் உணவை  சுவைபார்ப்பது.

நோன்பு  நோற்றிருக்கும் போது அனுமதிக்கப்பட்டவை:

1- உமிழ்நீரை விழுங்குதல். 

2- தேவைக்காக உணவின் சுவையை நாவினால் மாத்திரம் சுவைத்தல். அதனை விழுங்கக் கூடாது.

3- குளித்தல்.

4- பல் துலக்குதல்.

5- மனம் பூசுதல்.

6- குளிர் பெற்றுக் கொள்ளல்.

நோன்பின் போது தடுக்கப்பட்டவை:

1- நோன்பு துறக்காமல் இரண்டு நாட்கள் தொடராக நோன்பு நோற்றிருத்தல்.

2- முத்தமிட்ட பிறகு இச்சையை கட்டுப்படுத்தமுடியாமல் நோன்பு முறிந்துவிடும் என்ற அச்சமுள்ளவர் முத்தமிடுதல்.

3- தடைசெய்யப்பட்ட அனைத்து பேச்சுக்களும் செயல்களும். 

4- மடமையாகவும் நிதானமின்றியும் நடந்து கொள்ளல். 

(தொடரும்)

Presented by
Sunnah Academy
South India


 



Post a Comment

0 Comments