Ticker

Ad Code



ஜனாதிபதி அநுர, 77 ஆண்டு மரபினை மாற்றியமைத்துள்ளார்


2025 வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் போது 77 ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வந்த மரபினை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாற்றியமைத்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் போது இலங்கையில் கடந்த 77 ஆண்டுகளாக  நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் போது நிதி அமைச்சர்கள் பின்பற்றி வந்த மரபு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பின்பற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வழமையாக நிதி அமைச்சர்கள் வரவு செலவுத் திட்ட ஆவணங்களை இரகசிய பெட்டி ஒன்றில் போட்டு நாடாளுமன்றிற்கு கொண்டு செல்வது மரபாகும்.

இம்முறை  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆவணப்பெட்டியொன்றில் வரவு செலவுத் திட்ட ஆவணங்களை எடுத்து சென்று, வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments