Ticker

6/recent/ticker-posts

Ad Code



8 ரன்ஸ்.. கோலி போல் ஃபினிஷிங் செய்யாத ரூட்.. இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்பிய ஆப்கன்.. சரித்திர வெற்றி


ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 26ஆம் தேதி லாகூரில் நடைபெற்ற எட்டாவது போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு ரகமனுல்லா குர்பாஸ் 6, செதிகுல்லா 4, ரஹ்மத் ஷா 4 ரன்களில் ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் அவுட்டானார்கள். அதனால் 37-3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஆப்கானிஸ்தானுக்கு துவக்க வீரர் இப்ராஹிம் ஜாட்ரான் நிதானமாக விளையாடினார். அவருடன் எதிர்புறம் விளையாடிய கேப்டன் ஷாகிதி 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 40 ரன்களில் அவுட்டானார்.

மறுபுறம் தொடர்ந்து அசத்திய இப்ராஹிம் சதத்தை அடித்தார். அவருடன் எதிர்ப்புறம் சேர்ந்து விளையாடிய ஓமர்சாய் தம்முடைய பங்கிற்கு 41 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த முகமது நபி அதிரடியாக விளையாடி 40 (24) ரன்கள் விளாசினார். இறுதியில் இப்ராஹிம் 12 பவுண்டரி 6 சிக்ஸருடன் 177 (146) ரன்கள் எடுத்த உதவியுடன் ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 325-7 ரன்கள் எடுத்தது. 

சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரராக இப்ராஹிம் உலக சாதனை படைத்தார். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 3, லியாம் லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்துக்கு பில் சால்ட் 12, ஜேமி ஸ்மித் 9 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல நிதானம் காட்ட முயற்சித்த பென் டக்கெட் 38 ரன்களில் ரசித் கான் சுழலில் சிக்கினார்.

அடுத்ததாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் நங்கூரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். எதிர்ப்புறம் ஹரி ப்ரூக் 25 ரன்களில் நபி சுழலில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த கேப்டன் பட்லர் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முக்கிய நேரத்தில் 38 ரன்களில் அவுட்டானார். அவருக்கு அடுத்ததாக வந்த லிவிங்ஸ்டன் 10 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜோ ரூட் 5 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் சதத்தை அடித்ததால் இங்கிலாந்து எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 11 பவுண்டரி 1 சிக்ஸரை அடித்த அவர் 120 (111) ரன்களில் விராட் கோலி போல ஃபினிஷிங் செய்யாமல் அவுட்டானார். அடுத்ததாக வந்த ஜெமி ஓவர்டன் 32 (28), ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடியாக 14 (8) ரன்கள் ஃபினிஷிங் செய்யத் தவறினார்கள். இறுதியில் 49.5 ஓவரில் 317 இங்கிலாந்தை ஆல் அவுட் செய்த ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக வெற்றியை பெற்று சரித்திரம் படைத்தது.

2023 உலகக்கோப்பையில் இங்கிலாந்து தோற்கடித்த ஆப்கானிஸ்தான் தற்போது இத்தொடரிலும் வீழ்த்தி அபாரத்தைக் காட்டியுள்ளது. அதனால் இங்கிலாந்து இத்தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் வெளியேற்றியுள்ளது. சமீப காலங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் போன்ற வலுவான அணிகளை தோற்கடித்த ஆப்கானிஸ்தானுக்கு இப்போட்டியில் அதிகபட்சமாக ஓமர்சாய் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.

crictamil

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments