Ticker

6/recent/ticker-posts

Ad Code



84 வருட திருமண வாழ்க்கை-100 பேரக்குழந்தைகள்!! சாதனை புரிந்த தம்பதி-வைரல் செய்தி..


உலகில் நிகழும் பல்வேறு விஷயங்கள் பல சமயங்களில் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இது போன்ற பல விஷயங்கள் உலக சாதனைகளாகவும் இடம்பெற்று இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சாதனை குறித்து இங்கு பார்ப்போம்.

84 வருட திருமண வாழ்க்கை..

பிரேசில் நாட்டை சேர்ந்த இணை பிரியா தம்பதி, Manoel Angelim மற்றும் Mariya De Sousa Dino. இவர்கள் மொத்தம் 84 வருடம் மற்றும் 27 நாட்கள் ஒன்றாக திருமண தம்பதிகளாக இருந்தனர். இவர்களின் காதல் ஆரம்பித்த வருடம் 1936. அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து 1940 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் ஒன்றாக வாழ்ந்த இந்த நேரத்தில் மொத்தம் 13 குழந்தைகளை பெற்றெடுத்து கொண்டனர். 

பெருகிய குடும்பம்..

ஏற்கனவே இந்த தம்பதிக்கு 13 குழந்தைகள் இருந்தனர். இதுவே பெரிய குடும்பம்தான். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த குழந்தைகளுக்கும் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தன. இப்படி 55 பேரூர் பேத்திகளையும் பார்த்துவிட்டனர். கூடவே 54 கொள்ளுப்பேரன் பேத்திகள், 12 எள்ளு பேரக் குழந்தைகளையும் பார்த்து விட்டனர். 

இந்த செய்தியை அதிக ஆயுள் வாழ்பவர்களின் வாழ்க்கையை படம் பிடிக்கும் ஒரு செய்தி நிறுவனம் கவர் செய்துள்ளது. Mariaவை பார்த்த மாத்திரத்திலேயே Manoel காதலில் விழுந்திருக்கிறார். சில நாட்கள் டேட்டிங் செய்த பிறகு இருவரும்  இருவீட்டாரின் சம்மதத்திற்கு பின் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இத்தனை ஆண்டுகள் ஒன்றாக மகிழ்ச்சியுடன் வாழ காரணம் காதல்தான் என அந்த மரியா கூறுகிறார்.

வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள்..

இவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை பெரிதாக சந்தோஷமாக இல்லை. இருவரும் திருமணமான முதல் சில வருடங்களை புகையிலை விற்று நடத்தி இருக்கின்றனர். குழந்தைகளுக்கு தேவையானதை செய்து கொடுக்கவும் அவர்களுக்கு ஒரு நிலையான இல்லத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் இவர்கள் பல்வேறு எண்ணங்களை அனுபவித்திருக்கின்றனர். 

Manoel-Maria இருவருக்குமே 100 வயதிற்கு மேல் ஆகிவிட்டது. அனைத்து பேரன்பேத்திகளையும் பார்த்த பிறகு இவர்கள் தங்களது இடத்தில் நிம்மதியாக அமைதியாக வாழ்ந்து வந்தனர். வயது மூப்பு காரணமாக Manoel ஓய்வு எடுத்து வந்தாலும் சரியாக மாலை 6:00 மணிக்கு தனது மனைவியுடன் சேர்ந்து ரேடியோ கேட்பதை வழக்கமாக வைத்துக் கொள்வாராம். இதுவே அவர்களுக்கு வாழ்வில் பல்வேறு கட்டங்களை கடந்து செல்ல உறுதுணையாக இருந்திருக்கிறது. 

சாதனை..

இவர்கள் இருவரும் தான் உலகிலேயே அதிக ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த திருமண தம்பதிகள் என்ற சாதனையை படைத்திருக்கின்றனர். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்று இருக்கிறது. ஆனால் இவர்களை மிஞ்சி ஒரு தம்பதியும் இருக்கின்றனர். அவர்கள் மொத்தம் 88 வருடங்கள் மற்றும் 349 நாட்கள் ஒன்றாக திருமண வாழ்க்கையில் வாழ்ந்திருக்கின்றனர்.

zeenews

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments