
திருச்சி டிஐஜி வருண்குமார், தனது மனைவியை விவாகரத்து செய்ததாக பரவும் தகவலை மறுத்து, சீமானை மறைமுகமாக சாடியுள்ளார். சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையல்ல என்று விளக்கமளித்துள்ளார்.
தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக சமூகவலைதளங்களில் பரவும் தகவலை முற்றிலும் மறுத்துள்ள திருச்சி டிஐஜி வருண்குமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக சாடியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் திருச்சி டிஐஜி வருண்குமாருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிலவி வருகிறது. வருண்குமார் மற்றும் அவரது மனைவியும், ஐபிஎஸ் அதிகாரியுமான வந்திதா பாண்டே ஆகியோரை அநாகரிகமாக விமர்சித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக ஊடகங்களில் கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், திருச்சி டிஐஜி வருண்குமார் தனது மனைவி வந்திதா பாண்டேவை விவாகரத்து செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று டிஐஜி வருண்குமார் விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் தனது வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார்.
அதில், திரள்நிதி திருடர் எந்த அளவிற்கு சென்றுவிட்டார் என்று பாருங்கள் மக்களே என்று குறிப்பிட்டுள்ளார். பார்க்கவே பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், மைக் முன் புலி மற்ற இடத்தில் எலி என்றும் விமர்சித்துள்ளார். மேலும், நான் உனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன் என்ற பாடல் வரிகளையும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் விவாகரத்து செய்தியை முற்றிலும் வருண்குமார் நிராகரித்துள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments