Ticker

6/recent/ticker-posts

Ad Code



உலகின் மிகப்பெரிய ட்ராஃபிக்… அதுவும் இந்தியாவில்… எங்கே தெரியுமா?


பல கிமீ வரை ட்ராபிக் ஏற்பட்டு மக்களை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. அதுவும் இது இந்தியாவில் நடந்திருக்கிறது. வாருங்கள் எங்கே என்று பார்ப்போம்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளா பற்றி நம் அனைவருக்கும் தெரியும். உலகிலேயே மிகப்பெரிய நிகழ்ச்சி இதுவே ஆகும். இந்துக்களின் புனித நிகழ்வான இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி மக்கள் வருகை தருவர். இந்த ஆண்டு உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 

கடந்த ஜனவரி 14ம் தேதி தொடங்கிய இந்த கும்பமேளா வரும் 26ம் தேதி வரை சுமார் 45 நாட்கள் நடைபெறுகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக திகழ்கிறது. அங்கு திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் சுமார் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. 

பல கோடி மக்கள் கூடுவதால் அவ்வப்போது தீ விபத்து, கூட்ட நெரிசலில் உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

குறிப்பாக விடுமுறை நாட்களான ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் அளவுக்கு அதிகமான மக்கள் கூடுகின்றனர். இதனால் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டாலும், விபத்துக்கள் நடக்கத்தான் செய்கின்றன.

அந்தவகையில் நேற்றும் பல லட்சம் பேர் திரண்ட நிலையில், அங்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக மோசமான டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில ரூட்களில் 300 கிலோமீட்டர்கள் வரை கூட வாகனங்கள் டிராபிக்கில் சிக்கியுள்ளது.

பிரயாக்ராஜ் மட்டுமின்றி உபி எல்லை வரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக பெரிய டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம் வழியாக மகா கும்பமேளாவுக்கு நேற்று அதிகப்படியான மக்கள் வந்ததால் இந்த டிராபிக் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சுமார் 200-300 கிமீ வரை டிராபிக் நெரிசல் நீண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் அண்டை மாவட்டங்களில் சாலைகளை மூடி போக்குவரத்தை நிறுத்தினர். இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் வரை சாலையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதன் புகைப்படங்களைப் பகிர்ந்த நெட்டிசன்கள், “இதுதான் உலகின் மிகப்பெரிய ட்ராபிக்” என்று பதிவிட்டு வருகின்றனர்.

kalkionline

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments