Ticker

6/recent/ticker-posts

Ad Code



இஸ்ரேலிய பணய கைதிகளில் மூவரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தனர்


இஸ்ரேல்- ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் சூழ்நிலையில் இஸ்ரேலிய பணய கைதிகளில் மூவரை ஹமாஸ் அமைப்பினர் சனிக்கிழமை விடுதலை செய்தனர். 

அதன்படி, இஸ்ரேலிய பணய கைதிகளில் யாஹர் ஹரன் (வயது 46), அலெக்சாண்டர் ருபெனோ (வயது 29), சஹொய் டிகெல் ஷென் (வயது 36) ஆகிய 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்துள்ளது 

இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 369 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

முன்னதாக, கடந்த ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இரு நாட்டு பணய கைதிகளையும் விடுவிக்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்திருந்தன குறிப்பிடத்தக்கது

nambikkai

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments