
கன்னியாஸ்திரி ஆடை...வெள்ளை முகம்...கண்களைச் சுற்றிப் பெரும் கருவளையங்கள்...
பேய் என்று எண்ணுகிறீர்களா?
மலேசியாவில் அவ்வாறு எண்ணிய காவல்துறை அதிகாரி பயந்துவிட்டார்.
அறியாமலேயே அவரை பயமுறுத்திய ஃபாஸ்வின் (Fazwin) எனும் பெண் சம்பவத்தையொட்டி X தளத்தில் பதிவிட்டார்.
நிறுவனத்தின் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சிக்காகப் பேய் ஒப்பனை செய்த அவர் நிகழ்ச்சிக்குக் காரில் சென்றுகொண்டிருந்தபோது போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்தார்.
அவர்கள் அனைத்துக் கார்களையும் சோதனை செய்துகொண்டிருந்தனர்.
ஃபாஸ்வினைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நான் உண்மையில் நீங்கள் பேய் என்று நினைத்துவிட்டேன்!' என்று அவர்கள் நெஞ்சைத் தடவியவாறு கூறினர்.
ஃபாஸ்வின் உடனடியாக மன்னிப்புக் கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் வழியிலும் மேலும் இருவர் தம்மைக் கண்டு பயந்ததாக அவர் கூறினார்.
மற்றவர்களைப் பயமுறுத்தும் அளவிற்கு தம்முடைய தோற்றம் பேயைப் போல் இருந்தாலும் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் ' சிறந்த ஆடை' விருதைப் பெறவில்லை என்று ஃபாஸ்வின் வருந்தினார்.
ஃபாஸ்வினின் சமூக ஊடகப் பதிவு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது.
இணையவாசிகள் பலர் வேடிக்கையுடன் கருத்துரைத்தனர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments