
திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பெறுந்தொற்றுக்கு பிறகு மாரடைப்பு அதிக அளவில் வருகிறது. குறிப்பாகச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வேறுபாடு இல்லாமல் அனைவருக்குமே மாரடைப்பு ஏற்படுகிறது.
இதனால் திடீர் மரணங்கள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த இளம்பெண் பரினிதா ஜெயின். இவருக்கு வயது 23.
இவர் தனது தங்கையின் திருமண விழா கொண்டாட்டத்தில் மேடையில் நடனமாடிக்கொண்டு இருந்தார்.அப்போது திடீரென சரிந்து கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்தனர்.தொடர்ந்து அவருக்கு சிபிஆர் கொடுத்து இளம் பெண்ணை டாக்டர்கள் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்பொழுது திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண் கீழே விழுந்து உயிரிழக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ibctamilnadu

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments