
உக்ரைன் அதிபர் விளாடிமீர் செலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
ரஷ்யாவுடனான் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் மீண்டும் சண்டையைத் தொடரும் அவரின் போக்கு நிலைமையை மேலும் சிக்கலுக்கு வழிவகுப்பதாக டிரம்ப் கூறினார்
உக்ரைனுக்கு நிதி, ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா தயாராக இருந்தாலும் டிரம்ப் நிர்வாகம் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளதாக தெரிவித்தது. இதன் காரணமாக அமெரிக்காவின் கொள்கைகளில் பெருமளவில் மாற்றங்களும் செய்யப்பட்டது
பொதுத்தேர்தல் இல்லாத ஒரு சர்வாதிகாரி, செலென்ஸ்கி வேகமாக நடவடிக்கைகளை முன்னெடுத்தால் வருங்காலத்தில் அவருக்கு அந்த நாடு கூட இருக்காது என்று டிரம்ப் சாடினார்.
ரஷ்யா- உக்ரைன் போர் முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பைடன் ஆட்சிக்காலத்தில் விளாடீமீர் செலென்ஸ்கி சிறந்த தலைவராக பார்க்கப்பட்டார். புதிய அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், உக்ரைன் நடப்பு அதிபரை பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments