
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று (19) சட்டவிரோத மதுபானத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, சட்டவிரோத மதுபானம் காரணமாக பல சமூக மற்றும் குடும்ப பிரச்சினைகள் எழுந்துள்ளதாகக் கூறி பொதுமக்கள் இலங்கை இராணுவத்திடம் முறைப்பாடு ஒன்றினை முன்வைத்துள்ளனர்.
அத்துடன், சட்டவிரோத மதுபானத்தால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குடும்ப மோதல்கள் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சம்மாந்துறை பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி போராட்டக்காரர்கள் இவ்வாறு மல்வத்தை பகுதியிலுள்ள இலங்கை இராணுவத்தின் 24ஆவது காலாட்படை பிரிவு தலைமையகத்திற்குச் சென்று இராணுவ அதிகாரிகளிடம் தங்கள் குறைகளை தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து உரிய தரப்பினரிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவ அதிகாரிகள் அம்மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
tamilwin

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments