
துபாய்: இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ், சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள பெரிய மசூதியில் வழிபாடு செய்துவிட்டு அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அவர் இந்த புனித பயணத்தை மேற்கொண்டு இருப்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி, ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள் என்பதை சுட்டிக்காட்டி முகமது சிராஜை அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, முகமது சிராஜ் வெளியிட்ட அந்த புனித பயணத்திற்கான புகைப்படத்தில் பிரபல பாலிவுட் திரைப்பட பாடகியான ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லே "இதய" ஈமோஜிக்களை பகிர்ந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் முகமது சிராஜும் ஜனாய் போஸ்லேவும் சேர்ந்து பாட்டு பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது முகமது சிராஜ் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய உத்தேச இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் அவர் மாற்று வீரர்கள் பட்டியலில் இருக்கிறார். ஒருவேளை இந்திய அணியில் ஏதேனும் வேகப்பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டால் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்படலாம்.
முகமது சிராஜ் சமீப காலமாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதில்லை என்ற காரணத்தால் அவருக்கு முதற்கட்ட அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இனி அவருக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இடையே அழைப்பு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
முகமது சிராஜ் சமீப காலமாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதில்லை என்ற காரணத்தால் அவருக்கு முதற்கட்ட அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இனி அவருக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இடையே அழைப்பு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
mykhel

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments