Ticker

6/recent/ticker-posts

Ad Code



சட்டத்தரணி வேடத்தில் வந்த பெண்...கணேமுல்ல சஞ்சீவ படுகொலையில் பகீர் பின்னணி!


கனேமுல்ல சஞ்சீவ' என்ற சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், தற்போது சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபரை கைது செய்ததுடன், அவர் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர். 

அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவுக்கு அழைத்து வரப்படுவார். இந்த சந்தேக நபர் பல பெயர்களில் தோன்றியதாகவும், அவரிடம் பல அடையாள அட்டைகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த சந்தேக நபர் ஒரு வழக்கறிஞர் என்ற வகையில் ஒரு வழக்கறிஞரின் அடையாள அட்டையையும் வைத்திருந்தார்.

அவர் முதலில் முகமது அசாம் ஷெரில்தீன் என்ற பெயரிலும், பின்னர் சமிந்து தில்ஷான் பியுமாங்க கண்டனாராச்சி என்ற பெயரிலும், அவர் தயாரித்த வழக்கறிஞர் அடையாள அட்டையில் கொடிகரகே கசுன் பிரபாத் நிசங்க என்ற பெயரிலும் தோன்றினார்.

மேலும் சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவ வந்த பெண்ணின் புகைப்படங்கலும்  தற்போது வெளியிடப்பட்டுள்ளன. சட்டத்தரணி வேடத்தில் வந்த பெண்  கொலையாளிக்கு உதவியுள்ளது பெரும் அதிர்சியை எட்படுத்தியுயள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கனேமுல்ல சஞ்சீவ' என்ற சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், தற்போது சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபரை கைது செய்ததுடன், அவர் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர். 

துப்பாக்கிதாரிக்கு ஆதரவாக செயல்பட்டவர்  தேவகே இஷாரா சேவ்வந்தி என்ற பெண் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் விசாரணை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments