
இலகையில் திடீர் மின்சார தடை என்பது தற்போது பிரபலமாகி வருகின்றது என கூறுவதில் மாற்றுக் கருத்தொன்றும் இல்லை.
குரங்கு கையில் நம் நாட்டு மின்சாரம் சிக்கிவிட்டதாக பலதரப்பட்ட காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றது.
வாய்பேசத் தெரியாத அந்த ஜீவன்களின் மீது பலி சுமத்துவது வேடிக்கையாக இருக்கின்றது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான இந்த நேரத்திலும் , இதற்கான சரியான காரணம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தரப்பிலிருந்து தற்போது வரை எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை.
குரங்கின் மீது பலி போடுவது ஏன் என்று தெரியவில்லை .ரகசியங்கள் அம்பலமாகி விடுமோ என்ற அச்சமாகவும் இருக்கலாம் என்று மக்கள் அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த திடீர் மின்சார தடை என்பது அவ்வளவு சாதாரண விடயம் என அநுர அரசு கடந்து விட்டு சென்றமையினால் எவ்வித பதிலும் இதுவரை சரியாக அளிக்கப்படவில்லையா எனவும் கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments