அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் ஹெலிகாப்டருடன் மோதி ஆற்றில் நொறுங்கி விழுந்த பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கபட்டன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கண்டெடுக்கப்பட்ட அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
விபத்துக்கான காரணத்தைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள ஆற்றுக்குள் மூழ்கியுள்ள மேலும் பல முக்கிய பாகங்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன என்றனர்.
ஆற்றுக்குள் மூழ்கியுள்ள ஹெலிகாப்டரிலிருந்து கருப்புப் பெட்டிகள் இதுவரை மீட்கப்படவில்லை.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
nambikkai
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments