
ஆஸ்திரேலியாவில் கங்காருவைப் போல் கோலா விலங்கும் பிரபலம்.
குறிப்பாக ஓரிடத்தில் அந்த விலங்குகளை அதிகம் காணலாம்.
அந்த இடத்தில் அப்படி என்ன தனித்துவம்?
டரீ (Taree) எனும் இடத்திற்கு அருகே உள்ள மரங்களில் நிறையக் கோலாக்காளைப் பார்க்கலாம் என்கின்றனர் அவற்றை ஆராயும் நிபுணர்கள்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் மத்திய வடக்குக் கரையில் இந்த இடம் உள்ளது.
வெப்பத்தால் இயங்கும் ஆளில்லா வானூர்திகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் சுமார் 60 கோலா, ஜோயி விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மாநிலத்தின் ஆகப்பெரிய கோலாக் கூட்டங்களில் ஒன்று இங்கு இருப்பதாக அதிகாரிகள் சொல்கின்றனர்.
நியூ சவுத் வேல்ஸில் பொதுவாகக் கோலாக்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இதனைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பகுதியில் உள்ள தண்ணீர் விநியோக அணைக்கட்டு தான் இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
எளிதாகத் தண்ணீர் கிடைப்பதால் நீண்ட காலத்துக்குக் கோலாக்கள் செழித்து வாழ முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
கோலாக்கள் வசிப்பதற்கு உகந்த வகையில் கூடுதல் மரங்களை நடுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments