Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஜனாதிபதி அனுராவின் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம்


கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 44 ,293 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு  வருகை தந்துள்ளதாக சுற்றுலா  சபை தெரிவித்துள்ளது.

ரஸ்யாவில் இருந்து 5,795 சுற்றுலாப்பயணிகளும்,பிரித்தானியாவில் இருந்து 4,710 சுற்றுலாப்பயணிகளும்,இந்தியாவிலிருந்து 5,823 சுற்றுலாப்பயணிகளும், ,  நாட்டுக்கு வந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் அழகான கடற்கரை, கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம் என்ற திட்டம் காக்கை தீவு - மட்டக்குளிய கடற்கரையில்  (09) பிரதமர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.தூய்மை  இலங்கை திட்டத்தின் கீழ் இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம்,மேல் மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கிய 124 இடங்களில் காலை 8.00 மணி முதல் காலை 11.00 மணி வரை  நடைபெறவுள்ளது.

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments