Ticker

6/recent/ticker-posts

Ad Code



செல்போன் சண்டை... கிணற்றில் விழுந்து அண்ணன், தங்கை உயிரிழப்பு - புதுக்கோட்டையில் சோக சம்பவம்


மாத்தூர் அருகே அண்ணன் தங்கையிடையே ஏற்பட்ட சண்டையில் இருவரும் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே அண்ணன் தங்கையிடையே ஏற்பட்ட சண்டையில் இருவரும் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையம் அருகே உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்திரைகுமார் - ஜீவிதா தம்பதியினர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் மற்றும் 11 வயதில் ஒரு மகள் இருந்தனர். இதனிடையே இவர்கள் இருவரும் வீட்டில் இரு்நத போது அவர்களுக்கு ஏற்பட்ட சண்டையில் தங்கையின் செல்போனை அண்ணன் உடைத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த தங்கை அருகில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். தங்கை கிணற்றில் குதித்துள்ளார். இதை பார்த்த அண்ணன் அவரை காப்பற்ற கிணற்றில் அவரும் கிணற்றில் குதித்துள்ளார். இதில் இரண்டு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரின் சடலமும் திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பின்னர் அவர்களது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

அண்ணன் தங்கை இடையே ஏற்பட்ட சிறிய பிரச்சனையில் கிணற்றில் விழுந்து இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

news18

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments