Ticker

Ad Code



பொறுப்பான வேலையிலிருந்த பெண் கைது: அவரது வீட்டை சோதனையிட்டபோது


சுவிட்சர்லாந்தில், பொறுப்பான வேலையிலிருந்த ஒரு பெண் திருட்டுக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்.

சுவிட்சர்லாந்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தபால் அலுவலகத்தில் வேலை செய்துவந்த ஒரு பெண், அலுவலகத்திலிருந்து தொடர்ந்து பொருட்களைத் திருடிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நாளொன்றிற்கு அவர் சராசரியாக மூன்று மொபைல் போன்கள் அல்லது டேப்லட்களை திருடிவந்துள்ளார். அவற்றின் மதிப்பு, சுமார் கால் மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள்!

பொலிசார் அவரது வீட்டை சோதனையிட்டபோது, அவரது வீட்டில் 66 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவரை காதலிப்பதாக நடித்த ஒரு நபரிடம் மயங்கி, அவருக்காக அந்தப் பெண் இந்த குற்றங்களை செய்ததாக அவரது சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

ஆனால், அந்த நபர் இல்லாமல், வேறொரு நபரை காதலித்துவந்துள்ளார் அந்தப் பெண்.

ஆக, ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொண்டு, அலுவலகத்தில் திருடி, திருடிய பொருட்களை ஸ்பெயின் மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளில் விற்றுவந்துள்ளார்கள் அவர்கள்.

கைது செய்யப்பட்ட அந்த பெண்ணுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், அவரது காதலராக நடித்த நபருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

lankasri

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments