Ticker

Ad Code



வெளிநாடொன்றில் ரோபோ செய்த காரியம்: வைரலாகும் காணொளி


சீனாவில்(China) ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற காணொளி  இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீனா நாட்டின் சைனீஸ் திருவிழாவில் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட மனித அமைப்பிலான (ஹியூமனாய்ட்) ரோபோக்களின் குழு ஒன்றின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது, குழுவிலிருந்து விலகிய ரோபோ ஒன்று அதன் எதிரில் ஆராவாரம் செய்து கொண்டிருந்த மனிதர்களை நோக்கி நகர்ந்து மோதுவதைப் போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அந்த ரோபோவை தடுத்து நிறுத்தி செயலிழக்க வைத்தனர்.
இணையவாசிகள் சிலர் அந்த ரோபோ மனிதர்களைத் தாக்க முற்பட்டதாகக் கூறி கருத்து பதிவிட்டு வரும் நிலையில், அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சாதாரண தொழில்நுட்பக் கோளாறினால் அது இவ்வாறு செயல்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு லண்டனில் ஏஐ தொழில்நுட்பத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட விமானப்படை டிரோன் ஒன்று சோதனை ஓட்டத்தின் போது அதனை இயக்கிய மனிதரைத் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில் தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் ஏஐ தொழில்நுட்பத்தின் மீதான மனிதர்களின் பயத்தை அதிகரிப்பதாக இணையவாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ibctamil


Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments