Ticker

6/recent/ticker-posts

Ad Code



இந்த பவர் போதுமா.. கழற்றி விட்ட கேப்டன் ரோஹித் சர்மாவை போல்ட்டாக்கி பழி தீர்த்த சிராஜ்? ரசிகர்கள் கருத்து


ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற ஒன்பதாவது லீக் போட்டியில் குஜராத் அணி மும்பையை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மார்ச் 29ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் 197 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 63, கேப்டன் கில் 38, ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தனர்.

மும்பைக்கு அதிகபட்சமாக பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய மும்பை ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 160-6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ், 48 திலக் வர்மா 39 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதனால் குஜராத் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில் மும்பை தங்களது இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது. முன்னதாக இந்தப் போட்டியில் மும்பையின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே சிராஜுக்கு எதிராக அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டார். அதனால் தொடர்ந்து அவர் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கடுத்த பந்திலேயே அற்புதமாக பந்தை ஸ்விங் செய்த சிராஜ் 8 ரன்னில் ரோஹித் சர்மாவை கிளீன் போல்ட்டாக்கி பெவிலியன் அனுப்பி வைத்தார். அத்துடன் மற்றொரு துவக்க வீரர் ரியன் ரிக்கல்டனை 6 (9) ரன்னில் போல்ட்டாக்கிய சிராஜ் குஜராத்தின் வெற்றிக்கு ஆரம்பத்திலேயே அடித்தளமிட்டு முக்கிய பங்காற்றினார். அதைப் பார்த்த சில இந்திய ரசிகர்கள் சாம்பியன்ஸ் டிராபியில் கழற்றி விட்ட கேப்டன் ரோஹித் சர்மாவை சிராஜ் பழி தீர்த்துள்ளதாக சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

அதாவது 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் அபாரமாக பவுலிங் செய்த சிராஜ் இந்திய கோப்பையை வெல்ல உதவினார். அதே போல 2023 உலகக் கோப்பையிலும் சிறப்பாக பவுலிங் செய்த அவர் இந்தியா ஃபைனல் செல்ல உதவினர். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிராஜ் நல்ல பவுலராகவே அறியப்படுகிறார்.

அப்படிப்பட்ட சிராஜ் புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தடுமாறுவதால் சாம்பியன்ஸ் டிராபியில் கழற்றி விட்டதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். மேலும் சிராஜ்க்கு பதிலாக ஹர்ஷித் ராணா போன்ற புதுமுக வீரரை ரோகித் தேர்ந்தெடுத்தார். அதற்கு நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விமர்சனம் செய்தனர். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் ரோகித் சர்மாவை அதே புதிய பந்தில் அவுட்டாக்கி தன்னுடைய திறமையை காட்டிய சிராஜ் பழி தீர்த்துள்ளதாக ரசிகர்கள் பேசுகின்றனர்.

crictamil

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments