Ticker

6/recent/ticker-posts

Ad Code



மிஸ் ஃபீல்ட் முதல் பவர் ப்ளே தவறு வரை... தோல்விக்கான காரணங்களை அடுக்கிய ருதுராஜ் கெய்க்வாட்!


ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததற்கான காரணங்களை சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளக்கியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. இதன்மூலம் ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற ஐபிஎல்லின் 11 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தானை முதலில் பேட்டிங் ஆட அழைத்தது.

அதன்படி களம் இறங்கிய ராஜஸ்தான் வீரர்கள், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தானில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா, 5 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 83 ரன்களை குவித்து அசத்தினார். 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறி கொடுத்து தடுமாறியது.

கேப்டன் ருதுராஜ் பொறுப்புடன் விளையாடி 63 ரன்கள் சேர்த்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்களை சேர்க்க முடியாமல் திணறினர். இதனால், 20 ஓவர் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் தரப்பில், 4 ஓவர்களை வீசிய ஹசரங்கா, 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இதன்பின் பேசிய சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசினார். அதில், "பௌலிங்கில் பவர் ப்ளேயில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அந்த தருணத்தில் தான் போட்டியை நாங்கள் விட்டுவிட்டோம். நிதிஷ் ராணா ஸ்கொயருக்கு பின்னால்தான் அடிக்கிறார் என்பது தெரிந்தும், அவரை ஷாட்களை மாற்றி ஆட வைக்க தவறிவிட்டோம்.

அதேபோல், மிஸ் ஃபீல்டு. பீல்டிங்கில் செய்த தவறுகளால் 8-10 ரன்களை அதிகம் கொடுத்துவிட்டோம். இந்த ஆடுகளத்தில் 180 என்பது சேஸ் செய்யக்கூடிய ஸ்கோர். இதனால் சேஸ் செய்துவிடலாம் என்று மகிழ்ச்சியுடன் இருந்தேன். ரஹானே நம்பர் 3 இடத்தில் இறங்கி சென்னை அணிக்காக சிறப்பாக ஆடியிருக்கிறார். அம்பதி ராயுடுவும் சிறப்பாக இந்த வேலையை செய்துள்ளார்.

அவர்களின் பொறுப்பை நான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நம்பர் 3ல் இறங்கி விளையாடி வருகிறேன். ஆனால், 3 போட்டிகளாக முதல் 2 ஓவர்களுக்குள் நான் விளையாட வந்துவிடுகிறேன். ஓப்பனிங்கில் எங்களுக்கு சரியான மொமண்டம் கிடைக்கவில்லை. ஓப்பனிங் சரியாகும்பட்சத்தில் சிறந்த அணியாக மாறுவோம்" என்று ருதுராஜ் கெய்க்வாட் தோல்விக்கான காரணங்கள் பேசினார்.

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments