Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஏப்ரல் முதல் இந்திய பொருட்களுக்கு 100 சதவிகித வரி.. டிரம்ப் அதிரடி பேச்சு..!


ஏப்ரல் இரண்டாம் தேதி முதல், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பார்லிமென்டில் கூட்டுக் குழு கூட்டத்தில், ட்ரம்ப் முதல்முறையாக பேசினார். அப்போது, "அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கி விட்டது. அமெரிக்காவின் கனவை நினைவாக்க  நாம் உழைத்து வருகிறோம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள், சீனா, பிரேசில், இந்தியா உட்பட சில நாடுகள், நாம் அவர்களிடம் வசூலிப்பதை விட கணிசமான அளவில் வரிகளை வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது. குறிப்பாக, இந்தியா நம்மிடம் 100% வரி வசூலிக்கிறது. இந்தியா நமக்கு என்ன வரி விதிக்கிறதோ, அதே அளவு அவர்களுக்கும் நாம் வரி விதிப்போம்’ என்று அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், "கடந்த நான்கு ஆண்டுகளில் கடந்த ஆட்சி செய்ததை விட 43 நாட்களில் நாங்கள் அதிகமாக சாதித்துள்ளோம்.   மீண்டும் அமெரிக்காவை பணக்காரர்களாகவும் சிறந்தவர்களாகவும் மாற்றும் வழியை கண்டுபிடிப்போம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

webdunia

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments