
பாகிஸ்தான் ராணுவ தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
.
வடமேற்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள ராணுவ வளாகத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்களை மோதவிட்டு சிலர் வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து ஒரு கும்பல் ராணுவ தளத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னுவில் நடந்த இந்த தற்கொலைப்படை தாக்குதலால் அருகில் இருந்த மசூதியின் கூரை இடிந்து விழுந்தது. பல கட்டடங்கள் சேதம் அடைந்தன. இடிபாடுகளில் சிக்கிய 4 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயம் அடைந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் தலிபான் குழுவுடன் தொடர்புடைய ஜெய்ஷ் அல்-ஃபர்சான் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் கூறியுள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments