
மியன்மாரின் இணைய மோசடி நிலையங்களில் இன்னும் 100,000 பேர்வரை வேலை செய்துகொண்டிருக்கக்கூடும் என்று காவல்துறையின் மூத்த அதிகாரி கூறியிருக்கிறார்.
இதுவரை 7,000க்கும் அதிகமானோரை அத்தகைய நிலையங்களிலிருந்து தாய்லந்து வெளியேற்றியிருக்கிறது.
அவர்களில் அண்மையில் காப்பாற்றப்பட்ட இந்தோனேசிய குடிமக்களும் அடங்குவர்.
இணைய மோசடி நிலையங்களில் வேலை செய்த ஆயிரக்கணக்கான முன்னாள் ஊழியர்கள் இப்போது தாய்லந்து - மியன்மார் எல்லைப் பகுதியில் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப் பன்னாட்டு தேசிய ஒருங்கிணைப்பு நிலையம் தேவை என்று தாய்லந்து கூறியிருக்கிறது.
ஆரம்பத்தில் மீட்கப்பட்ட சுமார் 5,000 பேரை விசாரித்தபோது அவர்களில் நூற்றுக்கணக்கானோர் வேலை தேடி சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு விருப்பப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments