
சீனாவின் விலங்கியல் தோட்டத்தில் Pelican பறவை ஒன்று செய்த செயலைத் தாங்களும் செய்யலாமா என்று இணையவாசிகள் வேடிக்கையாகப் பேசி வருகின்றனர்.
அதில் தன்னுடன் "வேலை செய்யும்" சகப் பறவையை ஒரு Pelican பறவை சாப்பிடுகிறது.
அதைப் பார்த்த விலங்கியல் தோட்ட ஊழியர் வெற்றிகரமாக அந்தப் பறவையை Pelican பறவையின் வாயிலிருந்து வெளியே எடுத்துவிட்டார்.
ஆனால் இது முதல் முறையல்ல என்று கூறப்பட்டது.
ஒரு முறை அது கோழிக் குஞ்சை விழுங்க முயன்றதும் தெரியவந்தது.
அதற்குத் தண்டனை?
அது கூண்டில் அடைக்கப்பட்டது.
அந்தக் காணொளியைப் பார்த்தோர் வேடிக்கையாகக் கருத்துத் தெரிவித்தனர்.
"அதைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது. அதற்குப் பிடிக்காத சக ஊழியர்களை அதனால் சாப்பிட முடிகிறது" என்றார் ஓர் இணையவாசி.
"இன்று அது சக ஊழியரைச் சாப்பிட்டது. நாளை அது தோட்டத்திற்கு வருபவரைச் சாப்பிடலாம். நான் இந்த விலங்கியல் தோட்டத்திற்குச் செல்லமாட்டேன்" என்று மற்றோர் இணையவாசி குறிப்பிட்டார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments