
குறள் 893
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
ஒருத்தன் தானே கெட்டுப் போகணும்னா என்ன செய்யணும் தெரியுமா? வழிகாட்டிகளா இருக்கவங்க சொல்லுததை  கேக்காம அவங்களையே மோசமா பேசணும். 
குறள் 894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
வழிகாட்டியா இருந்து வாரவங்களுக்கு, ஒண்ணுந் தெரியாதவனுவொ கெடுதல் செஞ்சானுவொன்னா, அது அவனுவளோட முடிவை அவனுவொளே தேடிக்கிறது மாதிரி தான். 
குறள் 895
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
ஆள்றவங்களை பகைச்சுகிட்டவங்க, எப்பிடி தப்பிச்சு போனாலும் எங்கியும் அவங்களால உயிர் வாழமுடியாது. 
குறள் 896
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
தீயால சுடப்பட்டாக்கூட ஒருத்தனால உயிர் பிழைச்சுக்க முடியும். ஆனா பெரியவங்ககிட்ட மட்டும் தப்பா நடத்துகிட்டா ஒரு நாளும் தப்பிப் பிழைக்க முடியவே முடியாது. 
குறள் 898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
மலை போல ஒசந்த தெறமையுள்ள பெரியவங்களை எவனாவது அழிக்க நெனைச்சாமுன்னா, அவன் எம்புட்டு பெரிய பணக்காரனா இருந்தாலும், குடும்பத்தோட அழிஞ்சு போவான். 
(தொடரும்) 

கட்டுரைகள் |  Ai SONGS |

Email;vettai007@yahoo.com

0 Comments