
உப்புவெளி பிரதேச சபை பொதுமண்டபத்தில் விழுது நிறுவனத்தின் ஏற்பாட்டில் வட்டமேசை கலந்துரையாடல் விழுது உத்தியோகத்தர் இதயா தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாசத்தின் தலைவி இல்முன்நிசா நிஸ்மி அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வை பெண்ணிய செயற்பாட்டாளரும் வளவாளருமான நளினி அவர்கள் பால்நிலையை அடிப்படையாகக் கொண்டு பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகள் தொடர்பான கலந்துரையாடலை நெறிப்படுத்தினார்.

அத்துடன்பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (WDO), மூதூர் சிறு கைத்தொழில் அபிவிருத்திய உத்தியோகத்தர் , உப்பு வெளி கமநல அபிவிருத்திய உத்தியோகத்தர் மற்றும் சட்டத்தரணி முகுந்தன் ஆகியோர் பெண்களின் சமூக பொருளாதார அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்வில் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட உள்ள பெண்கள் , சமாசம் அமரா அங்கத்தவர்கள், பெண் தொழில் முயற்சியாளர்கள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு மட்டங்களை சார்ந்த பெண்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

திருமலை நிஷா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments