Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருமணமான 25 நாட்களில் மனைவி செய்த கொடூர செயல்.. போலீசில் கணவன் பரபரப்பு வாக்குமூலம்!


கடலூரில் திருமணம் ஆகி 25 நாட்களில் கணவனுக்கு கூல்டிரிங்ஸ்-ல் விஷம் கலந்து கொடுத்ததாக மனைவி மீது பகீர் குற்றசாட்டு வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் திருமணமாகி 25 நாட்களில் தனது மகனுக்கு மருமகள் கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். பிப்ரவரி 26 ஆம் தேதி சுந்தரமூர்த்தியின் மகன் கலையரசனுக்கும் அதே ஊரை சேர்ந்த பெண்ணிற்கும் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

ஆனால் அப்பெண்ணிற்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும், வேறு ஒருவரை காதலிப்பதாக கூறிய அவர், அடிக்கடி இரவில் யாரிடமோ வீடியோ காலில் பேசி வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பெண்ணின் வீட்டில் புகாரளிக்க “தாலி கட்டியாச்சு! என்ன ஆனாலும் வாழ்ந்தாக வேண்டும்” என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் மனைவிக்கு தன் மீது விருப்பமில்லை என்பதை உணர்ந்த கலையரசன் தனது குடும்பத்தினரிடம் கூறி புலம்பியுள்ளார்.

இதனால் கலையரசனின் குடும்பத்தினர் ஏற்கனவே காவல்நிலையத்தில் அது தொடர்பாக புகாரளிக்க முயன்றதாகவும் தெரிகிறது. அதில் ஆத்திரமடைந்த இளம்பெண், கலையரசனுக்கு கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றதாக பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலையரசன் இது தொடர்பாக விசாரணை நடத்தி தனது மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், கூல்ட்ரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்து கணவனை இளம்பெண் கொலை செய்ய முயன்றாரா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி ஒரு மாதத்திற்கு உள்ளாக கணவனுக்கு கூல்டிரிங்ஸ்-ல் விஷம் கலந்து கொடுத்ததாக மனைவி மீது கணவர் புகாரளித்துள்ள சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments