Ticker

6/recent/ticker-posts

Ad Code



IND vs NZ | தட்டி தூக்கிய வருண் சக்கரவர்த்தி..! கேன் வில்லியம்சனின் போராட்டம் வீண் - நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா


சாம்பியன்ஸ் கோப்பையின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் துபாய் மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

தொடக்கம் முதலே நியூசிலாந்து பவுலர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். ஷுப்மன் கில் 2 ரன்களிலும், கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும் ஆட்டமிழந்து இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். தனது 300ஆவது போட்டியில் விளையாடிய விராட் கோலி, அதிக ரன்கள் எடுப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் 11 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். ஒரு கட்டத்தில் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

அப்போதுதான் ஸ்ரேயஸ் ஐயர் - அக்‌ஷர் படேல் ஜோடி சேர்ந்து, ரன் எடுக்க தொடங்கியது. இவர்கள் ஆட்டத்தின் மூலம் ஸ்கோர் பொறுமையாக உயர்ந்தது. அக்‌ஷர் படேல் 42 ரன்களுக்கும், ஸ்ரேயஸ் ஐயர் 79 ரன்களும் எடுத்து வெளியேறினர். பிறகு நிலைத்து நிற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோரும் சற்று ஏமாற்றமளித்தனர்.

இறுதியில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 45 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்களில் 249 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கைல் ஜேமிசன், வில் ஓ'ரூர்க், மிட்செல் சாண்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியிலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய தொடங்கியது. ரச்சின் ரவீந்திரா 6 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, வில் யங், டாரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், ஆகியோரும் சோபிக்காமல், அடுத்தடுத்து தங்கள் விக்கெடுகளை பறிகொடுத்தனர்.

கேன் வில்லியம்சன் மட்டும் போராடி 120 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். ஆனால் அவரது நிதான ஆட்டமும் பலனளிக்கவில்லை. இறுதியில் அதிரடியாக விளையாடிய மிட்செல் சாண்ட்னராலும், நியூசிலாந்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

இதனால் நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பவுலர்கள் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், ஜடேஜா ஆகியோர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வரும் மார்ச் 4ஆம் தேதி எதிர்கொள்ளவிருக்கிறது. நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை மார்ச் 5ஆம் தேதி எதிர்கொள்கிறது. அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள், இறுதிப்போட்டியில் மார்ச் 9ஆம் தேதி பலப்பரிட்சை நடத்தவுள்ளது.

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments