
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களையும், இனவாத மற்றும் தீவிரவாத போக்குகளையும் பொதுச் சட்டத்தின் கீழ் தீர்க்க முடியாவிட்டால், அதற்காக புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அதற்காக தேவையான புதிய சட்ட கட்டமைப்பு மூலம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்யவுள்ளதாகவும், அதற்காக ஒரு குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
"இனவாதமும் தீவிரவாதமும் எமது நாட்டில் மீண்டும் ஒருபோதும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்..." என்று கூறிய ஜனாதிபதி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் வெறும் குற்றவாளிகளின் குழு மட்டுமல்ல, அவர்கள் நீண்ட காலமாக அரசியல் பாதுகாப்பு மூலம் சுதந்திரமாக வளர அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், பொலிஸில் சிலர் இந்த குற்றவாளிகளுடன் தொடர்புகளை பேணுவதாகவும், சில முன்னாள் ஜனாதிபதிகளின் மகனுக்கு 7 துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.
சில துப்பாக்கிகளை முறையாக கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பற்றி எந்த பொறுப்பும் இல்லாத ஆட்சி நாட்டில் இருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
"நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், தேசிய மக்கள் சக்தியில் எங்கள் அரசாங்கம், இந்த குற்றக் கும்பல்களுடன் மோதி, அவற்றை எமது நாட்டில் இருந்து முடிவுக்கு கொண்டு வரும்.... இவை எப்படி இந்த கும்பல்களுக்கு வந்தன? விசாரணைகள் நடைபெறுகின்றன, பயப்பட வேண்டாம். ஆனால், அந்த விசாரணைகளை நாங்கள் ஊடக சந்திப்புகள் நடத்தி அல்லது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மாட்டோம். நாங்கள் அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். முன்பு இது ஒரு பாரம்பரியமாக இருந்தது. விசாரணை நிலைமைகளை ஊடகங்களுக்கு சமர்ப்பித்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாகின்றனர். அவை காட்சி விசாரணைகள். நாங்கள் அவற்றை நடத்தப்போவதில்லை."
adaderanatamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments