Ticker

6/recent/ticker-posts

Ad Code



பாகிஸ்தானில் கொடூரம் : மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்


பாகிஸ்தானில் மசூதியொன்றில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (28) பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பகதுன்க்வாவில் உள்ள மசூதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

குறித்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் ஜமியாத் உலேமா இஸ்லாம் (JUI) அமைப்பின் தலைவர் ஹமிதுல் ஹக் ஹக்கானி உயரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கும் என கைபர் பகதுன்க்வா ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கொடூரம் : மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல் | Pakistan Khyber Pakhtunkhwa Mosque Bomb Attack

ஹமிதுல் ஹக்கை கொலை செய்யும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ibctamil

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments