
அமெரிக்காவில் 10இல் ஒரு வீட்டில் ஆங்கிலம் தவிர்த்த மற்ற மொழி பேசப்படும் சூழலில், டிரம்பின் இந்த உத்தரவு புலம்பெயர்ந்தவர்களை பாதிக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான உத்தரவில் கையெழுத்திட்டுள்ள டிரம்ப், ஆங்கிலம் தொடர்புகளை நெறிப்படுத்துவது மட்டுமின்றி, ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்க உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தன்னாட்சி அமைப்புகள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள் ஆங்கிலம் அல்லாதவர்களுக்கு மொழி ரீதியாக உதவ வேண்டும் என 1990ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் பில் கிளிண்டன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவை தற்போது ரத்து செய்துள்ள டிரம்ப், ஒரே மொழியில் குடிமக்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும்போது நாடு பலப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 1980ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022இல் ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 10இல் ஒரு வீட்டில் ஆங்கிலம் தவிர்த்த மற்ற மொழி பேசப்படும் சூழலில், டிரம்பின் இந்த உத்தரவு புலம்பெயர்ந்தவர்களை பாதிக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments