
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் பதவி விலகி, இந்தியாவுக்கு தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது அங்கு பல்வேறு ஊழல் வழக்குகள் நடந்து வருகிறது.
ரூப்பூர் அணுமின் நிலையம் உட்பட 9 திட்டங்களில் இருந்து ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.80,000 கோடி மோசடி செய்ததாக டிச.17ல் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ரூ.2500 கோடியை அமெரிக்காவுக்கு பறிமாற்றம் செய்ததாக டிச.22ல் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்குகளை நீதிபதி எம்டி ஜாகிர் உசேன் விசாரித்து வந்தார். மார்ச் 11 அன்று ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுக்க முயற்சி செய்வதாக புகார் கூறப்பட்டதால் 124 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
நேற்று மேலும் 31 வங்கி கணக்குகளை முடக்க டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கணக்குகள் ஷேக்ஹசீனா, அவரது மகன் சஜீப் வாஸேத் ஜாய், மகள் சைமா வசேத் புட்டுல், சகோதரி ஷேக் ரெஹானா, மருமகன் ரத்வான் முஜிப் சித்திக் பாபி மற்றும் அவர்களது நிறுவனங்களுக்கு சொந்தமானது. இந்த வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ. 281 கோடியும் முடக்கப்பட்டுள்ளன.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments