
இதைக் கேட்டுக் கொண்டிருந்த கபிலர், வருத்தப்பட்ட அந்த அந்தணர்கள் புரியும் படியாக, இந்த அகவற்பா சொன்னதால், இந்தப் பாடல் எளிய நடையில் இருந்தது என்பதே உண்மை.
மேலும் அதே அகவற்பாவில் செந்தமிழ்ச் செய்யுள்
நடையிலே 'கபிலரசுவல் கபிலர்க்கே' என்று சொல்லும் படியாக,
“இன்புறு நாளுஞ் சிலவே யதாஅன்று
துன்புறு நாளுஞ் சிலவே யாதலாற்
பெருக்கா றொத்தது செல்வம்
பெருக்காற் றிடிகரை யொத்த திளமை யிடிகரை
வாழ்மர மொத்தது வாழ்நா ளாதலால்"
எனவும்,
'"உயிரினை யிழந்த வுடலது தன்னைக்
களவு கொண்ட கள்வனைப் போலக்
காலு மார்த்துக் கையு மார்த்துக்
கூறை களைந்து கோவணங் கொளுவி
ஈமத் தீயை எரியெழு மூட்டிப்
பொடிபடச் சுட்டுப் புனலிடை மூழ்கிப்
போய்த்தம ரோடும் புந்திநைந் தழுவது
சலமெனப் படுமோ சதுரெனப் படுமோ
பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்''
என்ற படியும்
“திருவும் வறுமையும் தெய்வப் பேறும்
சாவதும் வேறிலை தரணி யோர்க்கே
குலமு மொன்றே குடியு மொன்றே
இறப்பு மொன்றே பிறப்பு மொன்றே
வழிபடு தெய்வமு மொன்றே யாதலான்
முன்னோ ருரைத்த மொழிதவ றாமல்
எந்நா ளாயினும் இரப்பவர்க் கிட்டுப்
புலையுங் கொலையுங் களவுந் தவிர்ந்து
நிலைபெற வறத்தின் நிற்பதை யறிந்து
ஆணும் பெண்ணு மல்லதை யுணர்ந்து
பேணி யுரைப்பது பிழையெனப்படாது
சிறப்பும் சீலமு மல்லது
பிறப்பு நலந் தருமோ பேதை யீரே"
என்பனவுமாக, நாம் செய்யுளைக் காண்கிறோம்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments