
மலைவீழ் அருவியின்
மௌனமான ஒலியிலும்
தென்றலில் சலசலக்கும்
மரத்தின் ஓதையிலும்காவினுள்
இன்னிசைக்கும் வண்டின்
சப்தத்திலும்
அன்புள்ளத்தின் ஊற்றெனப்
பெருகிவரும் வெள்ளத்திலும்
இளம்மாலையில் தென்னை
வீசும் ஒய்யாரத்திலும்
செந்நிற தேவனின் வரவை
தெளிவுடனே
அறிவிக்கும் முன்னே இருக்கும்
மயக்க இருளின்
மனமார்ந்த அமைதியின்
இசையிலும்
எனதன்புத் தலைவனின்
மழலை மொழியினை
பாங்குடனே கேட்கிறேன்
இப்புவியின்
இயற்கை மடியினிலே
எனது மழலைச் செல்வமே
எந்தன் உயிரே!
வசந்தா பாபாராஜ்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments