
435. வினா : உயிருக்குத் துன்பம் இல்லை எப்போது?
விடை: தனக்கு ஒவ்வாததைத் தவிர்த்து அளவுடன் உண்டால்
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.(945)
436. வினா : தலையின் இழிந்த மயிரனையர் யார்?
விடை: ஒழுக்க நெறியில் தவறுபவரே
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.(964)
437. வினா : மலை போல் உயர்ந்தவரும் இழிந்தவரே எப்போது?
விடை: குன்றிமணி அளவு இழிசெயல் செய்தாலும்
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.(965)
438. வினா : கவரி - மா(ன்) இனத்தைச் சார்ந்தவர் யார்?
விடை : மானம் இழந்து வாழாதவர்
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்.(969)
439. வினா : எல்லா உயிர்களுக்கும் பொதுவானது எது?
விடை : பிறப்பு
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.(972)
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com

0 Comments