Ticker

6/recent/ticker-posts

மருதப்"பா"வரங்கம்-24


"இலக்கியக் கரையோரம்"
"ஈன்றோறே என்றும் இறை"

 (எண்சீர் மண்டிலம்)

மலைமேலே இருப்பானோ மாயம் செய்ய
மாநதியில் "கலப்பானோ நேயம் உய்ய"

அலைதோறும் இருப்பானோ அகிலம் வெல்ல
அடியார்க்குள் "மறைவானோ அன்பைச் சொல்ல"

இலைகொடியில் இருப்பானோ இறைவன் இல்லை
இசைவானோ "காற்றுள்ளும் "இறைவன்"இல்லை"

நிலையாகும் "தெய்வத்தைக்"
கண்டேன் நானே 
நேர்நிற்கும் "என்தந்தை தாயும் தானே"

கூட்டுக் குடும்பம்:
"தெரிந்து நடப்பதே தேர்வு"

(நேரிசை வெண்பா)

ஓட்டும் பகையை உதவிடும் கூட்டுக் குடும்பமே 
காட்டும் பரிவை கருணையுடன்

கூட்டில்

பிரிந்த புறாவின் பெருந்துயர்"காதை"
தெரிந்து நடப்பதே தேர்வு:

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments