
மியன்மாரில் இணைய மோசடி நிலையங்களிலிருந்து மீட்கப்பட்ட இந்தோனேசியர்கள் தாய்லந்து எல்லை சென்று சேர்ந்துள்ளனர்.
அவர்கள் இரண்டு பேருந்துகளில் காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டனர்.
அவர்கள் விருப்பப்பட்டு அந்த நிலையங்களில் வேலைக்குச் சேர்ந்தார்களா வற்புறுத்தி சேர்க்கப்பட்டனரா என்பதைக் கண்டுபிடிக்க சோதனைகள் நடத்தப்படுகின்றன.
எனினும் தாய்லந்து சென்றுசேர்ந்த இந்தோனேசியர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை.
தாய்லந்து, மியன்மார், சீனா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் இணைய மோசடி நிலையங்களை முறியடிக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாகப் பலர் சிக்கினர்.
மியன்மார் எல்லையில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 7,000க்கும் அதிகமானோர் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்காகக் காத்திருக்கின்றனர்.
அந்த எண்ணிக்கையைக் கையாள்வதில் தாய்லந்து அரசாங்க வளங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments