ஆல மரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்.. ஏன் தெரியுமா?

ஆல மரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்.. ஏன் தெரியுமா?


மேற்கு வங்காளத்தில் உள்ள பெல்டாங்கா நகராட்சியில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் வைரலாகி வருகின்றனர். அதற்கு காரணம் என்ன தெரியுமா? பூமி வெப்பமடைவதைக் குறைக்க இங்குள்ள ஆலமரம் மற்றும் அரச மரத்திற்கு இடையே இவர்கள் திருமணம் நடத்தி வைத்துள்ளார்கள். இதற்காக இந்த 2 மரங்களும் மணமகன் மற்றும் மணமகள் போல அலங்கரிக்கப்பட்டன. இந்த திருமணத்தைக் கண்டு ரசிப்பதற்காக பெல்தங்கா காவல் நிலையத்தைச் சேர்ந்த டோலுவா தக்ஷின்பரா கோயில் வளாகத்தில் ஊர் மக்கள் அனைவரும் குவிந்தனர்.

ஆண்கள், பெண்கள் குழந்தைகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட சுமார் 3000-க்கும் மேற்பட்ட நபர்கள் சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டு இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர, தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் பலர் திருமண விழாக்களில் பங்கேற்பதற்காக இங்கு வருகை தந்தனர். விருந்தினர்களுக்கு சுவையான விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரிசி மற்றும் பருப்பு கஞ்சி (கிச்சூரி அல்லது கிச்சடி என்று அழைக்கப்படுகிறது) மற்றும் தின்பண்டங்கள் பரிமாறப்பட்டன.

சுவையான உணவுகள் மட்டுமின்றி, திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களை சந்தோஷப்படுத்த பாடல்கள் மற்றும் நடனங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தப் பகுதிகளில் தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கவழக்கங்களில் ஒன்றான ஆலமரங்களின் திருமண சடங்குகள் இந்து கலாச்சரப்படி நடத்தப்பட்டது. பலாஷ் மண்டல் மற்றும் உத்பல் மண்டல் என்ற இரண்டு உள்ளூர்வாசிகள் மர தம்பதிகளை ஆசீர்வதித்தனர். பலரையும் கவரும் வகையில் இந்த திருமண விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதன் மூலம் மரங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்கும் என தொழில்முனைவோர் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.

இந்த வித்தியாசமான திருமண விழா குறித்த கூடுதல் விவரங்களை கிராம மக்கள் தெரிவித்தனர். இங்கிருந்த 6-வது மரத்தை விற்பனை செய்து விட்டதாகவும், அதன் காரணமாக உள்ளூர்வாசிகள் அதற்கு அடுத்ததாக மற்றொரு மரத்தை நட்டு, பின்னர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும் ஒருவர் கூறினார். எல்லாமே முறையான விதிகளின்படிதான் நடக்கிறது என்றும் கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பூசாரி ஒருவர் கூறுகையில், இந்து மத சாஸ்திரங்களின்படி, ஆலமரம் மற்றும் அரச மரங்களை அருகருகே நட்டால் அதற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். தற்போது அதன் அருகிலேயே இரண்டு ஆலமரங்கள் மற்றும் அரச மரங்களும் நடப்பட்டுள்ளன.

இதேப்போன்ற சம்பவம் ஒன்று ராய்கஞ்ச் மாவட்டத்திலும் நடைபெற்றுள்ளது. அங்குள்ள உள்ளூர் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மழை பெய்யவும் ஊர் செழிப்பாக இருக்கவும் கிரமத்தில் இருந்த ஆலமரம் மற்றும் அரச மரங்களுக்கு இடையே திருமணம் செய்து வைத்தனர்.

news18



 



Post a Comment

Previous Post Next Post