
மூதாட்டி ஒருவர் தனது கணவருக்காக 103 வயது வரை காத்திருந்துள்ளார்.
சீனா, குய்சாவ் மாநிலத்தைச் சேர்ந்த டு வூஷென் என்ற மூதாட்டி, ஹூவாங் என்பவரை 1940ல் திருமணம் செய்துள்ளார். பின், கணவர் ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.
தொடர்ந்து 1943ல் கணவருடன் சிறிதுகாலம் வசித்துள்ளார். அப்போது வூஷென் கர்ப்பமாகியுள்ளார். அதன்பின் குழந்தை பிறந்ததும், மகனை பார்க்க ஒருமுறை கணவர் வீடு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து, 1952ல் கடைசியாக அவரிடமிருந்து கடிதம் வந்துள்ளது. இதன்பின் கடிதம் வருவது நின்றுள்ளது. இதனால், குடும்பத்தை காப்பாற்ற வெவ்வேறு வேலைகளை மூதாட்டி செய்துள்ளார்.
ஆனால், தன் கணவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் 80 ஆண்டுகள் காத்திருந்த மூதாட்டி தனது 103 வயதில் உயிரிழந்தார்.
ibctamilnadu

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments