
420. வினா : பகைவரின் வணக்கம் எதைப் போன்றது?
விடை: வளைந்த வில் போன்றது
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்.(827)
421. வினா : பகைவரின் கண்ணீர் எத்தகையது?
விடை : வணங்கிய கைகளில் கொலைக்கருவி இருப்பதைப் போல
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து.( 828 )
422. வினா : பேதையினும் பேதையார் யார்?
விடை : கற்றறிந்து, எடுத்துரைத்து, தான் அடங்கா திருப்பவர்
ஓதிஉணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான்அடங்காப் பேதையிற் பேதையார் இல்.( 834 )
423. வினா : வெண்மை எனப்படுவது யாது?
விடை: தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவமே
வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. (844)
424. வினா : உயிர் போகும் அளவிற்குத் தீராத நோய் எது?
விடை: பிறர் சொல்வதும் கேளாது, தானும் செயல்படாதவன் செயல்
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய். (848)
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments