Ticker

6/recent/ticker-posts

Ad Code



இதுமட்டும் இன்னொரு முறை நடந்தா நிச்சயமா பும்ராவோட கரியர் ஓவர் – எச்சரித்த ஷேன் பாண்ட்


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா அண்மையில் நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதோடு எதிர்வரும் ஐபிஎல் தொடரிலும் முதல் இரண்டு வாரங்கள் அவரால் விளையாட முடியாது என்கிற தகவல் வெளியாகி மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்தினர் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது பும்ரா அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற விளையாடினார். அந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் விளையாடி முடித்த வேளையில் ஐந்தாவது போட்டியின் போது அவருக்கு முதுகு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரது காயம் தீவிரமடைந்ததால் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பும்ரா விலகியிருந்தார். இந்நிலையில் பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள இந்த காயம் மீண்டும் அதே இடத்தில் ஏற்பட்டால் நிச்சயம் அவரது கரியர் முடிவுக்கு வரும் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷேன் பாண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

சிட்னி டெஸ்ட் போட்டியின் போது ஸ்கேனுக்கு சென்ற அவருக்கு மீண்டும் அதே இடத்தில் காயம் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தேன். ஏனெனில் ஏற்கனவே ஒரு இடத்தில் ஏற்பட்ட காயம் மீண்டும் அதே இடத்தில் ஏற்படுமாயின் நிச்சயம் அங்கு சில அசவுகரியங்கள் இருக்கும். அதன் காரணமாக அதே இடத்தில் காயமடைந்தால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்ற மாட்டார் என கணித்திருந்தேன். அந்த வகையிலே அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இடம்பெற முடியாமல் போனது.

என்னை பொறுத்தவரை பும்ரா மீண்டும் அதே இடத்தில் காயமடைந்து மற்றொரு அறுவை சிகிச்சை அங்கு நடத்தப்பட்டால் அவரது கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒரே இடத்தில் இருமுறை அறுவை சிகிச்சை செய்யக்கூடாது அப்படி செய்தால் அந்த காயத்திலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அவர் தற்போது காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதாக செய்திகள் வெளியாகின்றன.

பும்ரா போன்ற ஒரு வீரர் நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருக்கிறது. ஆனாலும் என்னுடைய அனுபவத்திலிருந்து ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு இடத்தில் தொடர்ந்து பிரச்சினை வரும்போது நிச்சயம் அது அவர்களது உடற்தகுதியை பாதிப்பதோடு ஒட்டுமொத்த கரியரையும் முடிவுக்கு கொண்டு வந்து விடும் என ஷேன் பாண்ட் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

crictamil

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments