பசியோடு கழித்த பொழுதுகள்!

பசியோடு கழித்த பொழுதுகள்!


மனிதர்களுக்கு வழிகாட்ட இறைவன் மனிதர்களில் புனிதர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளான். அவர்களையே நாம் இறைத்தூதர்கள் என்று அழைக்கிறோம். 

 

அவர்கள் மக்களோடு மக்களாக கஷ்ட சுகங்களை அனுபவித்தே வாழ்ந்துள்ளார்கள். அத்தூதர்களில் இறுதியாக வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இருந்து சில நிகழ்வுகள்: 

நபித்தோழர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 

“ஒரு நாள் நான் இறைத்தூதர் {ஸல்} அவர்களின் வீட்டிற்கு அவரைக் காண்பதற்காகச் சென்றேன். அப்போது, அண்ணலார் வீட்டில் உட்கார்ந்து தொழுது கொண்டிருந்தார்கள்.

நான் நபி {ஸல்} அவர்கள் தொழுது முடிக்கும் வரை காத்திருந்து விட்டு, தொழுது முடித்த பின் “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் உட்கார்ந்து தொழ நான் கண்டேனே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?” என வினவினேன்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் “அபூஹுரைராவே! பசிதான் காரணம்” என்றார்கள். அதைக் கேட்டதும் நான் அழுது விட்டேன். 

அப்போது, இறைத்தூதர் {ஸல்} அவர்கள் என்னை நோக்கி “அபூஹுரைராவே! இப்போது நான் என்ன சொல்லிவிட்டேன் என்று அழுகின்றீர்கள்? நாளை மறுமை நாளில் கேள்வி கணக்கின் கஷ்டத்தை உணரும் பட்சத்தில் உலகில் பசியோடு இருக்கும் நிலை ஒன்றும் பெரிதாகத் தெரியாது” என்று பதில் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத்)

thiruqurannarcheydhimalar


 



Post a Comment

Previous Post Next Post