தேவையானவைகளையும்
செய் முறைகளையும் தருகின்றேன்
அளவு உங்கள் தேவைக்கு
ஏற்ப போட்டுக் கொள்ளலாம்.
தேவையானவை
கடுகு
பூண்டு
பெருங்காயம்
சின்ன வெங்காயம்
கறிவேப்பிலை
தேங்காய்ப்பால்
சிறு சீரம்
முழு மிளகு
காய்ந்த கறிவேப்பிலை
பழப்புளி
மஞ்சள்
உப்பு
பச்சைமிளகாய்
செய்முறை
மிளகு காய்ந்த கறிவேப்பிலை சீரம்
மூன்றையும் பாதி முறுவல் போல் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
தேங்காயில் மூன்று முறை பால் எடுத்து தனித்தனியாக வைத்துக் கொள்ளவும்
வாழைக்காயை கரட் சீவி வெட்டுவது போன்று துண்டு போட்டுக் கொள்ளவும்
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்
பூண்டு கடுகு இவைகளை உரலில் போட்டு குத்திக் கொள்ளவும்
மூன்றாம் போலோடு மிளகாய் 'பெருங்காயம் உப்பு 'மஞ்சள் ' வாழைக்காய் இவைகளைப் போட்டு அவித்துக் கொள்ளவும் காய் நன்றாக அவிந்ததும் புளி இரண்டாம் பால் இடிச்ச பூண்டு இவைகளைப் போட்டு கொதிக்க விடவும் பால் வத்தி திரண்டு வரும் போது வெங்காயம் முதல் பால் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள் அடிப் பிடிக்காத வாறு அடுப்பை குறைவாக வைத்துக் கொதிக்க விடவும் 10 நிமிடத்தில் பொடி செய்த பொருட்களை சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அடைத்துக் கொள்ளவும் (தேவை என்றால் அஜனா ரசமுசா) சேர்த்துக் கொள்ளலாம் நான் சேர்க்க வில்லை.
Email;vettai007@yahoo.com
0 Comments