Ticker

6/recent/ticker-posts

இலங்கை முப்படையிலிருந்து தப்பித்தவர்கள் கைது


இலங்கைமுப்படையிலிருந்து உரிய முறையில் விலகிச் செல்லாத 1600க்கும் மேற்ப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டரீதியாக இராஜினாமா செய்யாது, பணியிலிருந்து விலகியவர்களை கைதுசெய்யும் செயற்பாடு கடந்த பெப்ரவரி மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கான உத்தரவை பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா  பிறப்பித்திருந்தார். இதற்கமைய நேற்றைய தினம் வரை 1604 முப்படை உறுப்பினர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப் பட்டவர்களில் 1394 பேர் இராணுவ வீரர்களும் ,138 விமானப்படை வீரர்களும், 72 கடற்படை வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.


Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments